தாயுமானவர் பாடல் தொகுப்பு தமிழ் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ., SACRED HYMNS OF THAYUMANAVAR (With meanings in Tamil, Synopsis and English translation) Prof. S.N. Chokkalingam, M.A.,

₹520.00

Author Name

Su.Na.Chokkalingam

Description

முன்னுரை

சீரும் சிறப்பும் வாய்ந்த பாரதத் திருநாட்டில் தமிழ்நாடு, தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற ஒரு பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. பக்தி இலக்கியம், ஞான இலக்கியம், யோக இலக்கியம் ஆகியவை இங்குத் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பயிரைப் பாங்குறச் செழித்தோங்க வளர்த்தனர். திருமூலர், பட்டினத்தார் போன்ற ஞானாசிரியர்கள் ஞானநெறியையும், யோகநெறியையும் வளம்பெறச் செய்தனர். ஆகவே, பக்தி, ஞானம், யோகம் என்னும் மூன்று நெறிகளிலும் தமிழ்நாடு சிறப்புடன் இலங்கி வருகின்றது. இம்மூன்றையும் ஒருங்கே தம்முட்கொண்டு வாழ்ந்த அருள்நெறிக் காவலர்களுள் தாயுமானவர் தலையாய தவப்புதல்வர் ஆவார். பிறப்பு, இறப்பு என்னும் வட்டச் சுழற்சியை ஒழிக்கும் வழியை இவர் நவில்கின்றார். இதுவே, முக்திக்கு இட்டுச் செல்லும் சீரான பாதையாக அமைய வல்லது. சந்தமும் இனிமையும் கலந்த அவருடைய செந்தமிழ்ப் பாடல்கள் தமிழின்பமும், வடசொல் நயமும் இழைந்தோடிப் பக்தி, ஞானயோக நெறிகளை நன்கு வகுத்துக் காட்டுகின்றன. இவரது கனிவுமிக்க பாடல்கள், படித்தாலும், அருகில் நின்று கேட்டாலும், நினைத்தாலும் பேரின்பம் பயக்கும் தன்மையன.
‘தாயுமானவர் பாடல் தொகுப்பு’ என்னும் நூலிற்கு முறையே பாடல், பதவுரை, கருத்துரை ஆகியவை எழுதப்பட்டுள்ளன.
இந்நூலுக்கு அருமையான அணிந்துரை வழங்கியுள்ள என் பெருமதிப்பிற்குரிய நண்பர், மதுரை தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் சுப. அண்ணாமலை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உரியது.
இந்நூலினைச் செம்மையாக செம்மையாக அச்சிட்டு வெளியிடும் ‘பழனியப்பா பிரதர்ஸ்’ உரிமையாளர் பழ செல்லப்பன் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
தமிழக மக்கள் இந்நூலை ஏற்றுப் போற்றுவார்களென நம்புகின்றேன்.
-பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம்