Description
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆய் நாட்டின், அகண்ட தமிழகத்தின் வணிகர்கள் சூதுபவள வணிகத்துக்கான கடல் பாதையைத் தென்கொரியாவின் கயா நாடு வரை விரிவுபடுத்தினர். தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தின் பொதிகை மலைப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுத்தா என அழைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
‘தென்கொரியாவை ஆண்ட தமிழச்சி செம்பவளம்‘ எனும் இந்த வரலாற்றுப் புதினத்தை சிறப்பாக படைப்பதற்கு உறுதுணையாக இருந்தது இதற்கு முன்னர் நான் எழுதியுள்ள இது சார்ந்த 6 ஆய்வு நூல்களே காரணம். என்னுடைய ஆய்வு நூல்களை நான் சிறப்பாக முன்னெடுப்பதற்கு எனக்கு வழிகாட்டி, உறுதுணையாக இருந்த, சமீபத்தில் இயற்கை எய்திய பேரா. நாகராசன் வடிவேலு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரியாவின் முதல் அரசி தமிழகத்தின் இளவரசி, செம்பவளம் எனும் மாதரசியாக இருக்கலாம் என்று முதன்முதலில் முன்னெடுத்த முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களுக்கும், மற்றும் அவருடைய மின்தமிழ் இணையக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும், மறைந்த திரு ஒரிசா பாலு அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
– தி. பவளசங்கரி