உண்மை சொல்ல வேண்டும், மணியன் (Unmai Solla Vendum, Manian)

335.00

Description

ஓர் எழுத்தாளன் என்று அறிமுகமாகி, திரு. மணியனின் நண்பர்களுள் ஒருவனாத்தின் உயிரோட்டமாக மனிதாபிமானமும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் உத்வேகமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு பெரிய நோக்கத்தோடு எழுதுவதாகப் பறைசாற்றிக்கொள்கப் பரிணமித்த பலரில் நானும் ஒருவன். திரு. மணியன் இன்னார் என்று தெரியாத நாளிலிருந்தே அவருடைய எழுத்துக்களால் கவரப்பட்டவனுங்கூட. திரு.மணியனின் நடை, சரளமான நடை. ‘நான் ஒரு கமர்ஷயல் எழுத்தாளன் என்று அவர் சொல்லிக்கொண்டாலுங்கூட அவருடைய எழுளாதவர், அவர். ஜனரஞ்சகமான நடை அவருக்குக் கைவந்த கலை. அதிகமாக ஆங்கிலச் சொற்கள் அடிபடுகின்றன அவர் கதையில் என்று குறைபட்டுக்கொள்பவர்கள் உண்டு. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். அவருடைய கதாபாத்திரங்கள் நவீன காலப் படைப்புகள். இன்றைய சமுதாய இளைஞர்களும் யுவதிகளும் அனேகமாக மேல் மத்திய தர வகுப்பினர் (Upper Middle Class). இவர்கள் பேசுவது நிறைய ஆங்கிலச் சொற்கள் கலந்த தமிழே. ஆகவே, பாத்திரங்கள் படைப்புக்கு ஏற்றபடி உரையாடுவதை யார் குறைகூற முடியும்?
வாரா வாரம் வெளியாகும் தொடர்கதைகள் திடீர்த் திருப்பங்களுக்குப் பேர்போனவை. வாரத் தொடர்கதைகள் பல, புத்தகமாக வெளியாகும்போது உயிரற்றவையாகிவிடும். ஆனால், திரு. மணியனின் எழுத்து இதற்கு விதிவிலக்கு. வாரத் தொடர்கதையாக மட்டுமின்றி, புத்தகமாகவும் வெளிவந்து, உயிர்பதிப்பாகவும் மலிவுப் பதிப்பாகவும் அச்சாகி, அத்துடன் நில்லாது நாடக வடிவிலும் அரங்கேறி வரவேற்கப்பட்டு, அத்தனைக்கும் சிகரமாய்த் திரைப்படமாக்கப்பட்டுப் பல லட்சக்கணக்கான வாசகர்களின் மனத்தை மகிழ்விக்கும் திறம் படைத்தவை இவருடைய கதைகள். இவருடைய கதைகள் இத்தகைய சிறப்புப் பெறுவதைக் காணும்போது எனக்கு ஆங்கிலக் கதாசிரியர்கள் ஹரால்டு ராபின்ஸ், ஹெய்லி போன்ற பலர் நினைவுக்கு வருகின்றனர்.
‘உண்மை சொல்ல வேண்டும்’ என்னும் இந்த நவீனம் தொடர்கதையாக வந்தபொழுது லட்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. ‘உண்மையைச் சொல்’ என்று அரிச்சுவடி வகுப்பிலிருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த உண்மையைச் சொன்னால் தாங்கிக் கொள்ளும் திராணி எத்தனை பேருக்கு இருக்கிறது? இதைத்தான் ஒரு பிரச்சனையாக வைத்துக் கதை புனையப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் ஆண் பெண்களின் உயிர்நிறைந்த, நடமாட்டம் நிறைந்த உண்மையான பாத்திரங்களின் போராட்டத்தை வெகு நளினமாகச் சித்திரித்துள்ளார்.
பொன்மொழிகளை உதிர்ப்பதும், அவற்றைத் தடித்த எழுத்துக்களில் அச்சிடுவதும் திரு. மணியனுக்குத் தெரியாத ஒன்று.
திரு. மணியனைப் பற்றி நீங்களும் நானும் கருதும் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளும் ஆவலில் எழுதியதுதான் இந்த முன்னுரையே தவிர, ‘மணியன்’ என்னும் நாவலாசிரியரை அறிமுகப்படுத்தும் அதிகப்பிரசங்கித்தனமல்ல. மூவடி மண் கேட்ட வாமனன் அல்ல, திரு. மணியன். அவர் விக்கிரமனாக வளர்ந்து நிற்பவர். அவரை அண்ணாந்து பார்க்க, நம் பார்வை உயரும்.
பயனுள்ள இந்நூலை அழகிய பதிப்பாக வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ் நமது பாராட்டுக்குரியவர்கள்.
திரு. மணியன் மேலும் மேலும் எழுதிக் குவிக்கட்டும்.
புதுக்கல்லூரி, எழுத்தாள நண்பன்
சென்னை-14 நா. அனந்த கிருஷ்ணன்.
9-1-1975