Description
கோகுல் சேஷாத்ரி – கணினி மென்பொருள் துறை பொறியாளர். பொறியியல் (B.E) மற்றும் மேலாண்மையில் (MBA) பட்டம் பெற்றவர். வரலாற்றில் முதுகலை (MA), முதுமுனைவர் (MPhil) மற்றும் முனைவர் (PhD) பட்டம் பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவர்.
நாகப்பட்டினம் குறித்த இவரது ஆய்வு 1600க்கும் மேற்பட்ட பன்னாட்டு ஆய்வாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இவரது புத்தகங்களைப் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனமும் ஒலிப்புத்தகங்கைள ஸ்டோரிடெல் (StoryTel) நிறுவனமும் பதிப்பித்துள்ளன. ஆழமான சரித்திரத் தகவல்கள் மற்றும் கல்வெட்டுச் செய்திகளை உள்ளடக்கிக் கதை சொல்லிச் செல்லும் இவரது பாணி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.