சிந்துபாத் கதைகள், ஜெயந்தி நாகராஜன் (SINDHUBADH KATHAIGAL, Jayanthi Nagarjan)

135.00

Description

சிந்துபாத் கதைகள்
பல ஆண்டுகட்கு முன்பு அரபு மொழியில் எழுதப்பட்ட கதையே அரபியன் டிலைட் எனும் கதை. அதாவது 1001 இரவுகள் தொடர்ந்து கதைகளைக் கூறித் தன் உயிரைக் காத்துக் கொண்ட ஓர் அரசி பற்றிய கதையே இது.
கதை சொல்வதும், கதை கேட்பதும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓர் அற்புதக் கலை. கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. பல நல் ஒழுக்கங்களை அறியவும் உதவுகின்றன. மொழி ஆளுமை அதிகரிக்கவும் கதைகள் துணை புரிகின்றன. நினைவாற்றலை அதிகரிக்கவும் கதைகள் உதவுகின்றன.
ஹாரிபாட்டரைப் படைத்த ஜே.கே. ரோலிங் தனது சிறு வயதில் மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் என இந்த அரபியன் டிலைட்ஸ் கதைகளைக் கூறுவார். இதில் அலிபாபா, அலாவுதீன், சிந்துபாத் எனப் பல கதைகள் அடங்கியுள்ளன.
இந்நூலில் சிந்துபாத்தின் கடல் பயணம் பற்றிய கதையினை இளஞ்சிறார்கள் படித்து மகிழும் வண்ணம் தந்துள்ளேன்.
யார் அந்த சிந்துபாத்? அவனுடைய கடற் பயண அனுபவங்கள் என்ன? என்பதை இக்கதையில் நீங்கள் படித்து மகிழலாம்.
இந்நூலை மிக அழகாக வடிவமைத்துப் பதிப்பித்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கு ஏற்ற வகையில் படங்களை வரைந்த ஓவியர் மிதுன் அவர்களுக்கும் என் நன்றி.
வாருங்கள்! படித்து மகிழுங்கள்!
அன்புடன்
ஜெயந்தி நாகராஜன்