காந்தி வாழ்க்கை, லூயி ஃபிஷர், தமிழில்: தி.ஜ.ர. (Gandhi Vazhkkai, Louie Fischer, Tamil: Thi.Ja.Ra)

500.00

Author Name

Louie Fischer

Description

காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர் லூயி ஃபிஷர். இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பத்திரிகை நிரூபராகச் சுற்றிக்கொண்டேயிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார். மகாத்மா காந்தியிடம் அபார ஈடுபாடு கொண்டவர்; மகாத்மாவாலேயே தாம் ஆளானதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்பவர்.