இராயர் அப்பாஜி (வண்ணப் படங்கள்)

120.00

Description

இராயர் அப்பாஜி – கதைகள்

‘கதைகளின் தாய் நிலம்’ என்று கொண்டாடப்படுகிற நம் பாரத தேசத்தில், விக்கிரமாதித்தனின் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள்‌, பஞ்ச தந்திர கதைகள், மரியாதைராமன் நீதிக்கதைகள் எனப் பல்வேறு சிறந்த கதைகள் நிறைந்துள்ளன. இந்த வரிசையில் பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் என்னும் படக்கதையும் தற்போது இணைந்துள்ளது.
மன்னர் கிருஷ்ண தேவராயர் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தார். அவரது அரச சபையில் முதல் மந்திரியாக (அரசவை கவிஞர்) அப்பாஜி பணிபுரிந்துகொண்டிருந்தார்.
மன்னருக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களுக்கும், பிற பிரச்சனைகளுக்கும் தனது விவேகத்தாலும், அறிவுத்திறமையாலும் மன்னரது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார்.
மக்கள் மனத்தைப் படித்து அதன் விசயங்களை தெரிந்துகொண்டு, அந்த பிரச்சனைக்கானத் தீர்வை அரசரிடம் தெரிவிப்பார் அப்பாஜி.
மக்கள் உழுது பயிரிட்டு அதன்மூலம் பயன்பெறும் நிலமானது அந்தந்த இடத்திற்கு ஏற்ப அமைந்துள்ள மண்ணின் தன்மையைப் பொருத்து மாறுபாடு அடைகிறது. இந்த நிலத்தின் மண் எதற்கு பயன்படும் என்பதை வயலில் வேலை செய்யும் பெண்களால் மூன்று வித நிலம் கதையின் மூலம் விளங்குகிறது.
அப்பாஜியின் புகழும் செல்வாக்கும் மன்னரிடம் உயர்வதைக் கண்ட மகாராணியின் தம்பி பொறாமைக் கொண்டான். தனது அக்காவிடம் தன்னை பிரதம மந்திரியாக நியமிக்க வேண்டும் என மன்னரிடம் கூறுமாறு தெரிவித்தான். மகாராணியின் யோசனையை கேட்டுக்கொண்ட மன்னர், மைத்துனரின் திறமையை சோதிப்பதற்காக அரச சபையில் ஒரு பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் அப்பாஜியின் திறமையை எட்டி உதைத்த கள்வன் கதையின் வாயிலாக பிறர் அறியச் செய்தார் மன்னர்.
தன்னிடம் சேவகம் புரியும் காவலாளி முகாமில் இருந்த 2000 பொற்காசுகளை திருடிவிட்டான், அதை அப்பாஜி தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்தார். இது கழுதையின் வாலைத் தடவி என்னும் கதையில் வருகிறது.
ஒருவர் தன் மனத்தில் நினைத்ததை அவரது முகக் குறிப்பைக்கொண்டு ஓவியமாக வரையவும், சிலையாக வடிக்கவும் இயலும் என்பதை சிறந்த கலைஞர்கள் என்ற கதையில், வடநாட்டு கலைஞர்கள் இரண்டு பேரின் திறமையை அப்பாஜி கண்டுகொள்கிறார், பிறகு அவர்களுக்கு பரிசுகள் வழங்குமாறு மன்னரிடம் கூறுகிறார்.
மனிதனின் உள்ளம் எப்படியோ அப்படித்தான் உலகமும். தன்னிடம் உள்ளது உலகத்திற்கும் உண்டு! தன்னிடம் இல்லாதது உலகத்திற்கும் இல்லை என்று எண்ணுவது மனிதனது இயல்பு. இக்கருத்தை மன்னரிடம் பணிபுரியும் சவரத் தொழிலாளியின் நடவடிக்கைகள் மூலம் எலுமிச்சம் பழம் அளவு தங்கம் என்னும் கதை அப்பாஜியின் அறிவுத் திறமையை விளக்குகிறது.
பள்ளி மாணவர்கள் தங்களது அறிவுக்கூர்மையை மேம்படுத்திக்கொள்ள இக்கதைகள் உதவும் என மனதார நம்புகிறோம்.
– பழனியப்பா பிரதர்ஸ்