வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, (Vetham Kanda Vinnanam, P. Muthukumaraswamy)

320.00

Description

உலகுக்கு பண்டைய பாரத நாடு அளித்த அறிவுக் கொடைகளை இந்த நூல் பட்டியலிடுகிறது. வானவியல், மருத்துவம், வேளாண்மை, விலங்கியல், அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கல்வி, நுண்கலைகள் உள்ளிட்ட 20 தலைப்புகளில் பாரதத்தின் பாரம்பரியக் கொடை, எண்ணம், சிந்தனை ஆகியவற்றை நூலாசிரியர் சிறப்புடன் தொகுத்துள்ளார். சான்றோர்கள் என்ற தலைப்பில், பாரதத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்கள், அண்மைக்காலத்தில் வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா உள்ளிட்ட பெரியோர்களின் கொடை முதலியவற்றையும் திறம்பட அளித்துள்ளார். வேதம், தமிழின் சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி, அறிவியல்ரீதியாக நம் நாட்டின் பழைமையான கருத்துகள் எவ்வாறு நவீன யுகத்துடன் இணைந்து போகின்றன என்பதையும் விளக்கியுள்ளார். 108 என்ற எண்ணின் சிறப்பு, வானியலும் ஜோதிடமும் காட்டும் அறிவியல் விளக்கங்கள், காலம் வெளி சார்ந்த சார்புக் கொள்கைகள் இவற்றையும் அலசியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். நம் நாட்டின் சுய கௌரவத்தை மீட்டெடுக்கும் நல்ல முயற்சி இந்த நூல்