வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம், பவளசங்கரி (Vetriku kaniyai etti parippom, Pavalasankari)

180.00

Description

வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (வாழ்க்கைக் கையேடு) வாழ்க்கையில் வெற்றியடைய மனதிலிருந்து அகற்ற வேண்டியதில் முதன்மையானது எதிர்மறைச் சிந்தனை. பவளசங்கரியின் ‘வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்’ என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆணிவேர் மேற்கண்ட சிந்தனை. இதை முன்வைத்து 34 பகுதிகளாக வேறுபட்ட எளிய உதாரணங்களோடு அவர் எழுதியிருக்கும் விதம் நமக்குள் ஒரு நம்பிக்கையை உருவாக்குவது உண்மை. விவேகானந்தர், அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், புத்தர் போலப் போராடிப் புகழ்பெற்றோரின் வாசகங்களை முன்வைத்து எழுதினாலும், சிறு சிறு கதைகள் மூலமும் சொல்லியிருக்கும் பாங்கு சுவையானது. நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசினாலும், உற்றுப் பார்த்துப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் போன்ற பல பயனுள்ள கைகாட்டிகளைப் பார்க்க முடிகிறது. இது ஒரு நல்ல கையேடு. இளைஞர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டியது.