வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்!, கர்னல் பா. கணேசன் (Venpanip Parappilum Sila Viyarvaith Thulikal!, Colonel P. Ganesan., VSM)

150.00

Author Name

Colonel.P.Ganesan., VSM

Description

வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்! என்னும் இந்நூல் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள அரிய நூல்களுள் ஒன்றுமாகும்…
நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம். நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது.
ஆனால் நூல் ஆசிரியர் கர்னல் பா. கணேசன், கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.
நினைக்கும் போதே, உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்கின்றன அல்லவா?
இவர் இராணுவ வீரரா
அல்லது
தமிழ்ப் பேராசிரியரா?
ஆம். தேவாரத்தையும், திருவாசகத்தையும் தன் மூச்சு போல், நொடிக்கு ஒரு முறை உச்சரிக்கும் நற்றமிழ் மனத்தினர் இவர்.
தனது அண்டார்டிகா அனுபவங்களை, வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்!
என்னும் பெயரில், அழகுத் தமிழில் ஓர் அற்புத நூலாக வெளியிட்டிருக்கிறார்.