Description
“அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெரும் கருணை”, “மரணமிலாப் பெருவாழ்வு”, அருட்பிரகாச வள்ளலார் என்று ஆன்மீக அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, வடலூர் இராமலிங்க அடிகள், இராமலிங்க சுவாமிகள், மனித குலத்துக்கு வழங்கியுள்ள மந்திரச் சொற்கள். நமது புராணங்களும், சமய வரலாறுகளும், சமயக் குரவர்களும், முழு முதல் பொருளான இறைவனை ஜோதி வடிவாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாகவே அவரைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.




