திறனாய்வு நோக்கில் திருவாசகம், ப. முத்துக்குமாரசுவாமி (Tiranaivu Nokkil Thiruvasagam, P. Muthukumaraswamy)

155.00

Description

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’
– திருமூலர்

‘‘தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும்தேன்.’’

என்னாட்டவருக்கும் இறைவனாக விளங்கும் சிவபெருமானை
செம்பொருளாக வாழ்த்தி வழிபட்ட இனம் தமிழினம். இத்தகைய
வழிபாட்டினை வாழ்வியலில் நடத்திய பெருமக்கள் சைவ சமயத்தைச்
சார்ந்தவர்களாக இருந்தார்கள். சைவத்தின் கொள்கையை சைவ
சித்தாந்தம் என்று அழைத்தார்கள். ஆனாலும் சைவம் என்பதும், சைவ
சித்தாந்தம் என்பதும் தனித் தனிப் பொருள் குறிப்பு உடையன. சைவம்
என்பது இமயப் பனிமுகடு முதல் தென் குமரி வரை பரந்து விரிந்து
பரவியுள்ளது. காசுமீரத்து சைவம், கன்னட நாட்டு வீர சைவம் என
பல பெயர்களால் சைவம் அழைக்கப்படுகிறது. வசுகுப்தர், கல்லாடர்,
சோமானந்தர், அபிநவகுப்தர் போன்ற சமயச் சான்றோர்களால் காசுமீரத்து
பெருநாட்டில் சைவம் வளர்ந்தது.
தமிழகத்தில் சைவம் நால்வர் பெருமக்களால் முறையே அப்பர், சுந்தரர்,
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற சமயாச்சாரியார்களால் சைவம் வளர்ந்தது.
சைவ சித்தாந்தக் கொள்கைகளின் அடிப்படையில் சிவபெருமான்
சைவசமய சான்றோர் மக்கள் பாக்களால் வாழ்த்தி பூசித்து வந்துள்ளனர்.
அந்த வகையில் மூவர் முதலிகள் தேவாரத் திருப்பதிகங்களையும்,
மணிவாசகப் பெருமான் திருவாசகம், திருக்கோவையார் போன்ற
நூல்களின் வழியாக இறைவனை வாழ்த்தி பூசித்து வந்துள்ளனர்.
மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் ஒன்றிரண்டு பாடல்களை
எடுத்து அதற்கு விளக்க உரையும் திறனாய்வு நோக்கில் ஒப்பீடு செய்து
இந்நூலில் பதிவு செய்துள்ளேன். வழக்கமாக என் நூலினை பதிப்பித்து
வரும் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் இந்நூலினையும் மனமுவந்து
பதிப்பித்தமைக்கு என் நெஞ்சிற்கினிய நன்றியறிதலை புலப்படுத்துவதில்
பெருமை கொள்கிறேன்.

ப. முத்துக்குமாரசுவாமி