Description
சைவம் – தமிழ் ஆகிய இருபெருந்துறைகளில் தலைசிறந்த நூற்களெனக் கருதப்படுபவை மூன்று. அவை திருக்குறள், திருவாசகம், திருமந்திரம். மும்மணிகளென ஒளிரும் இம்முத்தமிழ் நூல்கள் இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படும் தத்துவங்களைக்கொண்டு இலங்குபவை. நுண்மாண் நுழைபுல மக்களாலே அவ்வாழ்க்கைத் தத்துவங்களை எளிதில் உணர இயலும். ஆகவே, ஓரளவு தமிழ் கற்றவரும், படித்துத் தெளிந்து பயன்பெறும் வண்ணம் எளிய நடையில் இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கும் உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் – செந்தமிழ்ப்புரவலர் திரு. ஜி. வரதராஜன் அவர்கள். இவரைத் தமிழ் – சைவ உலகம் நன்கறியும். தத்துவ அறிவும், சாஸ்திர ஞானமும் நிரம்பியவர். பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் மாலை என்னும் இச்சாஸ்திர நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டு வருகிறோம். தற்போது, வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அம்மூன்று தொகுதிகளையும் சேர்த்து சிறப்பு வெளியீடாக ஒரே புத்தகமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். தமிழ்கூறு நல்லுலகம், இலக்கிய வளமும் தத்துவச் செறிவும் மிகுந்த இந்நூலை வாங்கிப் பயன் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.