Description
முனைவர் பொ. திராவிடமணி தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில், தமிழ்த்துறையில், இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 25 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர்.
பேராசிரியர், கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட இவர் குறள்நெறிச் செம்மல் விருது, அறிஞர் அண்ணா விருது,
அசோகமித்திரன் நினைவூக்க விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
“தமிழ் இலக்கிய வரலாறு”, “அறிவியலும் இலக்கியமும்”, “நக்கீரர் கபிலர்”, “பழந்தமிழரின் பண்பாட்டு முகங்கள்” உள்ளிட்ட எட்டுத் துறைச்சார்ந்த நுல்களையும், “மடைதிறந்து”, “வெயிலுதிர் காலம்”, “கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்”, “சொல் எனும் சொல்” என நான்கு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
“காக்கைச் சிறகினிலே”, “தாமரை”, “மணற்கேணி”, “உங்கள் நூலகம்”, “தாய்வீடு” உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரை, கவிதை, கதைகள் எழுதி வருகிறார்.