Sale!

கொம்பு முளைத்த குதிரை, கன்னிக்கோவில் இராஜா, Kombu Mulaitha Kuthirai, Kannikovil Raja

130.00 120.00

Description

‘வகுப்பறையில் கதைகேட்டல்’ என்கிற இன்பமான பகுதி இருந்த காலம் ஒன்றிருந்தது. இன்றைய குழந்தைகளுக்கு அந்த இன்பம் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக தொலைக் காட்சியில் வருகிற கதாபாத்திரங்களே இன்பம் அளிப்பதாக நம்புகிறார்கள். அவர்களுக்கான வழிகாட்டி கதாபாத்திரங்கள் என்றானது வருத்தமே.
குழந்தைகள் கதைளை விரும்பிக் கேட்பார்கள். அவர்களுக்கு கேட்கிற / படிக்கிற பழக்கத்தை பெற்றோர்கள்தான் உருவாக்க வேண்டும்.
நான் என் குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகளை, இன்று என் குழந்தைகளுக்குச் சொல்லி வருகிறேன். அதுமட்டுமல்ல, இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கதைகள், அறிவியல் முன்னேற்றக் கதைகள், தலைவர்களின் பொன்மொழிக் கதைகள், இயற்கை வளங்கள் குறித்த கதைகள் என, பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கிய கதைகளைக் கூறியும், எழுதியும் வருகிறேன்.
மாணவர்களால் நடத்தப்படுகிற ‘அரும்பின் புன்னகை’ குழந்தைகள் அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டு சிறுவர்களுக்கு சிறந்த தன்னம்பிக்கைக் கதைகளை கூறும் ‘கதை சொல்லி’யாகவும் திகழ்கிறேன்.
இந்த கதைகளிலும் குழந்தைகளுக்கு பிடித்த பல விலங்குகள் உலா வரும். அவை குழந்தைகள் உலகில் நுழையும், நுழைந்தவைகள்… தேனில் ஊறிய பலாச்சுளையாக கருத்துகளை அள்ளி தெளிக்கும்.
என்னை நன்குணர்ந்த குழந்தைக்கவிஞர் பணிச்செல்வர் பி. வெங்கட்ராமன் அவர்கள், இதுபோன்ற கதைகளை சிறந்ததொரு குழந்தை இலக்கிய வழிகாட்டி ‘பழனியப்பா பிரதர்ஸ்’ பதிப்பகத்தாரிடம் அளியுங்கள். அவர்கள் பல ஆண்டுகளாக குழந்தை இலக்கியத்திற்காகப் பாடுபட்டு வருகிறார்கள். இதனையும் நூலாக்கி வெளியிடுவார்கள்’ என
முன்மொழிந்தார். அவருக்கு என் நன்றி.
என்னுள் சிறுவர் இலக்கிய விதையைத் தூவிய பாவலர்
புதுவைத் தமிழ்நெஞ்சன் மற்றும் சிறுவர் கதைகள் உருவாக
உரமாக இருந்த குழந்தைகளுக்கும், மெய்ப்பு திருத்தம்
பார்த்தளித்த இலக்கியஇணையர் கவிஞர் செம்போடை வெ. குணசேகரன் – கவிஞர் மயிலை மா. சந்திரா ஆகியோருக்கும் நன்றி.
இந்நூலை மிக நேர்த்தியாக அச்சிட்டு, வளரும் புதிய தலைமுறைக்கு அளித்திருக்கிற பழனியப்பா பிரதர்ஸ் மற்றும் குழுவினருக்கும், இந்நூலுக்கு உயிரோட்டமான ஓவியம் வரைந்த ஓவியர் ‘தமிழ்’ அவர்களுக்கும் நன்றி.
தொடர்வாசிப்பின் முடிவாக இந்நூல் பற்றிய கருத்துகளை எனக்கு எழுதி, அடுத்தடுத்த நூல்களுக்கு ஆதரவாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

நேயத்துடன்
கன்னிக்கோவில் இராஜா