Description
குறளைப் பாடுவோம் – தொகுதி 1 திருக்குறள் அதிகாரம் 1 முதல் 8 வரை (குறள் 1 முதல் 80 வரை) குறளைப் பாடுவோம் – தொகுதி 2 திருக்குறள் அதிகாரம் 9 முதல் 29 வரை (குறள் 81 முதல் 288 வரை) குறளைப் பாடுவோம் – தொகுதி 3 திருக்குறள் அதிகாரம் 30 முதல் 49 வரை (குறள் 291 முதல் 490 வரை) குறளைப் பாடுவோம் – தொகுதி 4 திருக்குறள் அதிகாரம் 50 முதல் 69 வரை (குறள் 491 முதல் 690 வரை)
குழந்தைக்கவிஞர் செல்ல கணபதி:
பச்சையப்பன் கல்லூரியில் பட்டை தீட்டப்பெற்ற தமிழ் முதுகலைப் பட்டதாரி, கவிதைச் சிறகை விரித்து இலக்கிய வானில் பறந்த இவரைக் குழந்தை இலக்கியப் பாதையில் திசை திருப்பியவர் அமரர் அழ. வள்ளியப்பா. அதனால் அவர் மேல் இவர் கொண்ட ஆழ்ந்த பிடிப்பு அவரை இவரின் குருநாதராக ஆக்கியது. நன்றி மறவா உள்ளம் படைத்த கவிஞர் தம் சிந்தையில் வைத்துப் போற்றும் குழந்தைக் கவிஞர் பெயரில் ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பை டாக்டர் பூவண்ணன் அவர்களுடன் இணைந்து தொடங்கி, அதன்வழி குழந்தை இலக்கியப் பெருவிழாக்களைச் சிறப்பாக ஆண்டு தோறும் தமிழகத்தில் பல ஊர்களில் நடத்தி வருபவர். குழந்தைக் கவிஞரின் வாரிசு எனப் பலராலும் போற்றப்பெறுபவர். இதுவரை இவர் அளித்துள்ள குழந்தை நூல்கள் 32. இவரின் நூல்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. ‘மணக்கும் பூக்கள்’ என்னும் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். தம் பயண அனுபவங்களைச் சுவைமிகு நூல்களாக்கித் தந்தவர். இவரின் மழலையர் பாடல்கள் ஒலிப்பேழைகளாக வெளியிடப் பெற்று, குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இப்போது அவை படக் கலவையுடன் கூடிய அழகிய குறுவட்டாக (சி.டி.) வெளியிடப்பெற்றுள்ளது. சிரித்த முகமும், தேனீயைப் போல் சுறுசுறுப்பும், ஆடம்பரம் இல்லாத எளிமையும் கொண்ட குழந்தைக்கவிஞர் செல்ல கணபதி, குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர் எனில் அது மிகையில்லை. – பழனியப்பா பிரதர்ஸ்