கடலோடியின் கம்போடியா நினைவுகள், நரசய்யா (Katalotiyin Kampotiya Ninaivukal, Narasaiya)

60.00

Author Name

Narasaiya

Description

கம்போஜயம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட கம்பூச்சியா என்றறியப்பட்ட நாடாகும். இதற்குப் பிரான்ஸ் வைத்த பெயர் கம்போடியா. நரசய்யா கம்போடியாவுக்கு உலக வங்கியின் ஆலோசகராகச் சென்றபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். புதுகைத் தொன்றல் இதழில் தொடராக வந்தவை இப்பொழுது நூல் வடிவில். கடலோடி நரசய்யாவை உலகவங்கி கம்போடியா போய் நமக்குக் கதை சொல்லு என்று அனுப்பி வைத்தது போல் அமைந்திருக்கிறது!! பயண நினைவுகள்தான். விரிவாக கம்போடிய சரித்திரத்தை ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரு அலசு அலசுகிறார் பாருங்கள். அங்குதான் கடலோடியை நாம் கண்டு கொள்கிறோம். ‘இந்து’ என்று உணர்பவர் எல்லோரும் காண வேண்டிய ஓர் அற்புதக் கலைக் களஞ்சியம் அங்கோர்வாட். அது எப்படி விஷ்ணு கோயிலாக இருந்து பின் புத்த ஆலயமாக மாறுகிறது என்பதையெல்லாம் விளக்கமாகச் சொல்கிறார். கெமீர் இன மன்னர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதைப் பல ஆதாரங்களோடு நிருவுகிறார். கொலைக்களம் என்று வருணிக்கப்படும் போல்பாட் இனக்கொலைகள் பற்றி வாசிக்கும் போது வயிறில் புளியைக் கரைக்கும். அந்தக் காலத்து ஹிரண்யன், கம்சன், ஹிட்லர், மாசேதுங், ஸ்டாலின் என்ற எல்லோர் மொத்த உருவமாக 60-70 களில் நம்மிடையே ஒரு காட்டுமிராண்டி உலவியிருக்கிறான் என்பதை இப்புத்தகம் மூலமாவது தமிழுலகம் அறிந்து கொள்வது நலம். தூய வாதம், இனவாதம் என்றெல்லாம் தமிழக அரசியலில் பேசப்படும் விஷக்கருத்துக்கள் உடனே கிள்ளியெறியப்பட வேண்டும் என்பதற்கு எச்சரிக்கை மணி போல் ஒலிக்கிறது ”கம்போடிய நினைவுகள்”. கம்யூனிசத்தின் பெயரால் உலகில் நடந்துள்ள வன்முறைகளை எண்ணினால் கார்ல் மார்க்சின் ஆவி என்றுமே அமைதி கொள்ளாது! எளிய, தெள்ளிய நடை. தெரிந்து கொள்ள ஆயிரம் விஷயங்கள். நரசய்யா போன்று பழத்த உலக அனுபவம் பெற்ற, உலகு சிற்றிய வாலிபர் சொல்லி தமிழகம் கேட்க வேண்டிய விஷ்யம் நிறைய உள்ளது. ”கடலோடியின் கம்போடிய நினைவுகள்” ஒரு சின்ன சாம்பிள். அவ்வளவுதான். இம்மாதிரிப் பயண நூல்கள் வெளிநாட்டில் வந்தால் விரிவான வரைபடங்கள், காட்சிகள் அழகான வர்ணத்தில் வெளிவரும். தமிழர் செய்த துர்பாக்கியம். இன்னும் தமிழ் வெளியீடுகள் கருப்பு வெள்ளையில் கசிந்த மையும் கையுமாகவே உள்ளது. அது ஆசிரியரின் பிழை அல்ல. நல்ல புத்தகம். எல்லோரும் வாசிக்கவும், : – நா. கண்ணன்