Description
உலகில் உள்ள நாடுகள் பலவற்றிலும் இதிகாசங்கள் எழுதப் பெற்றுள்ளன.
இதிகாசம் என்பதற்கு வீரகாவியம் என்பது பொருள்.
நம் பாரத நாட்டில் இரு இதிகாசங்கள் எழுதப்பெற்றன. அவை: இராமாயணம், மகாபாரதம் ஆகும்.
இராமாயணத்தை வால்மீகி முனிவர் எழுதினார்.
மகாபாரதத்தை வியாச முனிவர் எழுதினார்.
இவ் இரு நூல்களும் வடமொழியில் எழுதப்பெற்றன.
இந்நூல்களைத் த்மிழகப் பெரும் கவிஞர்கள் தமிழில் எழுதினர்.
ஆதி காப்பியமான இராமாயணத்தைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் இராமாவதாரம் என்ற பெயரில் எழுதினார்.
இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுக்த காண்டம் என ஆறு காண்டங்களையும் 116 படலங்களையும் பெற்றிலங்குகிறது.
இந் நூல் செய்யுள் வடிவில் உள்ளதால் அனைவராலும் படித்து சுவைக்க இயலாது. அதனால் உரைநடையில் எழுதியுள்ளேன். படியுங்கள், பயன் பெறுங்கள்.
இந்நூலை வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ்க்கு என் நன்றி.
உங்கள் அன்பு விரியட்டும்; ஆதரவு பெருகட்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்!
அன்பன்
அரு. சுந்தரம்